search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா தொற்றினால் உறவினர்களை பறிகொடுத்த 21 சதவீத முதியோர்

    கொரோனா தாக்கி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டால் அதிக கவலை அடைவோம் என்று 42.1 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
    புதுடெல்லி:

    ஒரு தொண்டு நிறுவனம், 6 நகரங்களில் 3 ஆயிரத்து 525 பேரிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி புள்ளிவிவரங்களை சேகரித்தது. அதில் கொரோனா தொற்று முதியவர்களுக்கு பெரும் துயரத்தை அளித்துள்ளது தெரியவந்துள்ளது.

    முதியவர்களில் 20.8 சதவீதம் பேர், தங்கள் குடும்ப நபர்களையோ அல்லது நண்பர்களையோ கொரோனாவால் இழந்துள்ளனர் என்று கூறி உள்ளனர். கொரோனாவில் இருந்து உயிர்களை காக்க சிறந்த மருத்துவ கட்டமைப்புகளே தேவை என்று 50.8 சதவீதம் பேரும், தடுப்பூசி வேண்டும் என்று 44.45 சதவீதம் பேரும், மருந்துகள் சரியான நேரத்திற்கு கிடைத்தால் போதும் என்று 38.7 சதவீதம் பேரும் கூறி உள்ளனர்.

    கோப்புப்படம்


    கொரோனா தாக்கி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டால் அதிக கவலை அடைவோம் என்று 42.1 சதவீதம் பேர் கூறினர். 34.2 சதவீதம் பேர், தனிமைப்படுத்தினால் கவலை அடைவோம் என்றனர். கொரோனா காலத்தில், 52.4 சதவீதம் பேர் மூட்டு வலியால் அவதிப்பட்டதாகவும் 44.9 சதவீதம் பேர் நடைபயிற்சிக்கு சிரமப்பட்டதாகவும் கூறி உள்ளனர்.

    இவ்வாறு கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளன.
    Next Story
    ×