search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊரடங்கு
    X
    ஊரடங்கு

    பஞ்சாப், உத்தரகாண்டில் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு

    கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன.
    சண்டிகர்:

    நாட்டில் கொரோனா-வைரஸ் தொற்று இரண்டாவது அலை வேகம் தணிந்து வந்தாலும், முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில் அதுதொடர்பான ஊரடங்கை மாநில அரசுகள் நீட்டித்து வருகின்றன.

    இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு வரும் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், கடைகளை மாலை 6 மணி வரை திறந்திருக்க அனுமதிப்பது உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்படுவதாகவும் முதல் மந்திரி அமரீந்தர் சிங் அறிவித்தார்.

    கொரோனா பரிசோதனை

    சனிக்கிழமை உள்ளிட்ட வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

    இதேபோல், உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போதைய ஊரடங்கு இன்று (ஜூன் 8-ந் தேதி) காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், அம்மாநிலத்தில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் 15-ம் தேதி காலை 6 மணி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் என மாநில தலைமைச் செயலாளர் ஓம் பிரகாஷ் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்தார்.
    Next Story
    ×