search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபா ராம்தேவ்
    X
    பாபா ராம்தேவ்

    டெல்லி மருத்துவர் சங்க வழக்கில் பாபா ராம்தேவுக்கு ஐகோர்ட்டு சம்மன்

    பதஞ்சலி நிறுவனத்தின் ஆயுர்வேத மருந்தான 'கொரோனில் கிட்' கொரோனாவை குணப்படுத்துகிறது என்ற தவறான தகவலை பாபா ராம்தேவ் பரப்புவதற்கு தடை விதிக்க மனு தாக்கல் செய்யப்பட்டது.
    புதுடெல்லி:

    பதஞ்சலி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஆயுர்வேத மருந்தான 'கொரோனில் கிட்' கொரோனாவை குணப்படுத்துகிறது என்ற தவறான தகவலை பாபா ராம்தேவ் பரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி டெல்லி மருத்துவர் சங்கம் மனு தாக்கல் செய்தது.

    இந்த மனு தொடர்பான விசாரணை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சி.ஹரி சங்கர் அமர்வு முன்பு நேற்று நடைபெற்றது. டெல்லி மருத்துவர் சங்கம் மனுவை பரிசீலித்த நீதிபதி,
    பாபா ராம்தேவ் ஆஜராக சம்மன் அளிக்கவும், மனு தொடர்பாக பதில் அளிக்கவும் உத்தரவிட்டார்.

    மேலும் வழக்கு விசாரணையை ஜூலை 13-ந் தேதிக்கு தள்ளி வைத்தார். அடுத்த விசாரணை வரை, எவ்வித கருத்தையும் பாபா ராம்தேவ் தெரிவிக்கக் கூடாது என்றும் வாய்மொழி உத்தரவை பிறப்பித்தார்.
    Next Story
    ×