என் மலர்

  செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  இப்படியும் ஒரு கொடுமை: தற்கொலை செய்த இளம்பெண் கொரோனாவுக்கு பலியானதாக சித்தரிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதை மறைக்க கொரோனாவுக்கு பலியானதாக போலி சான்றிதழ் பெற்ற கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
  பீட் :

  மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் படோடா தாலுகா தன்கர் ஜவல்கா கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ் ராய்கர். இவரது மனைவி பூஜா(வயது21). இவரை கணவர் மற்றும் மாமியார், மாமனார் சேர்ந்து அதிக வரதட்சணை வாங்கி வருமாறு துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

  இதனால் மனமுடைந்த பூஜா தற்கொலை செய்வதற்காக கடந்த 19-ந் வீட்டில் இருந்த சானிடைசரை எடுத்து குடித்துவிட்டார்.

  இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை அகமதுநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புனே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் கடந்த 26-ந் தேதி அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

  இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு பிரேத பரிசோதனை செய்தால் அவர் தற்கொலை செய்துகொள்ள விஷம் குடித்தது தெரிவித்துவிடும் என அஞ்சிய கணேஷ் ராய்கரின் தாய் கொரோனா காரணமாக அவர் இறந்துவிட்டதாக காட்ட திட்டமிட்டார். இதற்காக போலி கொரோனா சான்றிதழை பெற்றார். இதை பெண் வீட்டாரிடம் காட்டினார்.

  இருப்பினும் அதை நம்ப மறுத்த அவர்கள் மீண்டும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.

  இதுகுறித்து பூஜாவின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கணேஷ் ராய்கர், அவரின் தந்தை சிவாஜி, தாய் விஜூபாய் மற்றும் போலி சான்றிதழ் பெற உதவிய உறவினர் நாம்தேவ் சுக்தே ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

  இதில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

  பெண்ணின் தற்கொலையை மூடி மறைக்க கொரோனாவை சாதகமாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  Next Story
  ×