என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆஸ்பத்திரிக்கு செல்ல பயம்... வினோதமான முறையில் தனிமைப்படுத்திய கொரோனா நோயாளி
திருமலை:
தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் கொத்தனிகொண்டா கிராமத்தை சேர்ந்தவர் சிவா (வயது25). குடும்பத்தினருடன் ஒரே அறையுடன் கூடிய வீட்டில் வசித்துவரும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் ஏற்கனவே அதிகளவில் இருப்பதால் அங்கு செல்ல பயந்து வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள சிவா முடிவு செய்தார்.
ஆனால் தங்கள் வீட்டில் ஒரே ஒரு அறை மட்டும் உள்ளதால் குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று ஏற்பட்டு விடும் என்று அஞ்சிய சிவா வினோத வகையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
தன்னை எப்படி தனிமைப்படுத்திக் கொள்வது என்று ஆலோசனை செய்த சிவா அதற்கு தனது வீட்டின் முன்பு இருக்கும் உயரமான மரத்தை தேர்வு செய்தார். அந்த மரத்தின் மீது கட்டிலை கட்டி பரண் போல் அமைத்து சிவா அதில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார்.
அவருக்கு கொடுக்க வேண்டிய மருந்து மாத்திரைகள், உணவு ஆகியவற்றை குடும்ப உறுப்பினர்கள் நேரம் தவறாமல் கயிறு மூலம் சிவாவுக்கு அனுப்பி வைக்கின்றனர். இரவு தூக்கமும் சிவாவுக்கு மரத்தின் மீதுதான். வாலிபரின் இந்த வினோத செயல் புதிய வகையான தனிமைப்படுத்துதலை காட்டியுள்ளது.