search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவேக்சின்
    X
    கோவேக்சின்

    ஜூன் மாதத்திற்குள் கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தி இரு மடங்கு அதிகரிக்கப்படும் : மத்திய அரசு

    அடுத்த மாதத்திற்குள் கோவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தி இரு மடங்கு அதிகரிக்கப்படும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அறிவித்துள்ளது
    புதுடெல்லி:

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரசின் 2-வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

    கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி பேராயுதமாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.  அந்த வகையில் தடுப்பூசி போடும் பணி விரைவு படுத்தப்பட்டுள்ளது. எனினும் பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுகிறது.

    கோப்புப்படம்


    இந்நிலையில் அடுத்த மாதத்திற்குள் கோவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தி இரு மடங்கு அதிகரிக்கப்படும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அறிவித்துள்ளது. கோவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தி மே - ஜூன் மாதங்களில் இருமடங்கு அதிகரிக்கப்படும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அறிவித்துள்ளது. மேலும் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் 6 முதல் 7 மடங்கு வரை உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×