search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு
    X
    மத்திய அரசு

    இந்தியாவுக்கு இதுவரை வெளிநாடுகளில் இருந்து 3.44 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகள் வந்துள்ளன- மத்திய அரசு

    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பயனுள்ள நிறுவனங்களுக்கு உடனடி ஒதுக்கீடு மற்றும் நெறிப்படுத்தப்பட்ட செயல்முறை தொடர்ந்து விரிவாக கண்காணிக்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில் திரவ மருத்துவ ஆக்சிஜனுக்கும், கொரோனா தடுப்பூசிகள் உள்ளிட்ட மருந்துகளுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள் இந்தியாவுக்கு ஏராளமான உதவிகளை அளித்து வருகின்றன.

    இதன்படி இந்தியாவுக்கு பல்வேறு நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் கடந்த ஏப்ரல் 27-ந்தேதி முதல் மருந்து, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உதவிகளை அளித்து வருகின்றன.

    இந்நிலையில் இந்தியாவுக்கு இதுவரை வெளிநாடுகளில் இருந்து 3.44 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகள் வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    ரெம்டெசிவிர்


    இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஏப்ரல் 27-ந்தேதி முதல் மே 11-ந்தேதி வரை வெளிநாடுகளில் இருந்து 9,284 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 7,033 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 5933 வெண்டிலேட்டர்கள், 3.44 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகள் சர்வதேச உதவியாக பெறப்பட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விடுவிக்கப்பட்டிருக்கின்றன.

    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பயனுள்ள நிறுவனங்களுக்கு உடனடி ஒதுக்கீடு மற்றும் நெறிப்படுத்தப்பட்ட செயல்முறை தொடர்ந்து விரிவாக கண்காணிக்கப்படுகிறது. 

    மே 11-ஆம் தேதி அன்று இங்கிலாந்து, எகிப்து, குவைத் மற்றும் தென் கொரியாவிலிருந்து 80 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 1,590 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் 20 வென்டிலேட்டர்கள் பெறப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×