search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பிரதமர் நிவாரண நிதியில் பெற்ற வென்டிலேட்டர்களை பயன்படுத்தாத மத்தியபிரதேசம், சத்தீஸ்கர்

    நாடுமுழுவதும் பெரிய பிரச்சினையாக வென்டிலேட்டர் தட்டுப்பாடு உள்ளது. இந்தநிலையில் இந்த 2 மாநிலங்களும் கையில் வென்டிலேட்டர் வைத்திருந்தும் அதை பயன்படுத்தாதது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    போபால்:

    கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை நாட்டுக்கே மிகப்பெரிய சவாலாக உள்ளது.

    கொரோனாவின் 2-வது அலை தொற்றில் சிக்குவோர் ஆக்சிஜன் பற்றாக்குறையாலும், வினியோக குளறு படியாலும் தொடர்ந்து பலியாகி வருகிறார்கள். நாடுமுழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    ஆக்சிஜன் பற்றாக்குறை, வென்டிலேட்டர் தட்டுப்பாடு ஆகியவை மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது.

    இந்தநிலையில் பி.எம்.கேர் நிவாரண நிதியில் பெற்ற வென்டிலேட்டர்களை மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் பயன்படுத்தாதது தகவல் வெளியாகி உள்ளது.

     

    கொரோனா வைரஸ்

    நாடுமுழுவதும் பெரிய பிரச்சினையாக வென்டிலேட்டர் தட்டுப்பாடு உள்ளது. இந்தநிலையில் இந்த 2 மாநிலங்களும் கையில் வென்டிலேட்டர் வைத்திருந்தும் அதை பயன்படுத்தாதது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆனால் இந்த வென்டிலேட்டர்கள் வேலை செய்யவில்லை என்று சத்தீஸ்கர் அரசு தெரிவித்துள்ளது. சத்தீஸ்கர் அரசு 230 வென்டிலேட்டர்களை பி.எம்.கேர் நிதியில் இருந்து பெற்றது. இதில் 58 வென்டிலேட்டர்கள் வேலை செய்ய வில்லை என்று தெரிவித்தது.

    ஆனால் இந்த வி‌ஷயத்தில் மாநில அரசுகள் பொய்யான தகவல்களை தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×