search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா பற்றிய அச்சத்தாலும் மக்கள் உயிரிழக்கின்றனர் - உத்தரபிரதேச மந்திரி சொல்கிறார்

    தங்களுக்கான கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானவர்கள், இந்த வியாதியைப் பற்றிய அச்சத்தை தமது வீடுகளில் இருந்து வெளியே பரப்புகின்றனர்
    லக்னோ:

    இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்றாக உத்தரபிரதேசம் உள்ளது. அங்கு இதுவரை 15 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இத்தொற்றுக்கு உள்ளாகி, 15 ஆயிரத்துக்கும் அதிமானவர்கள் உயிரைப் பறிகொடுத்திருக்கின்றனர்.

    இந்நிலையில், ஷாஜகான்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மாநில மருத்துவக் கல்வி மந்திரி சுரேஷ் கன்னா நேற்று சென்று தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

    பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், ‘தங்களுக்கான கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானவர்கள், இந்த வியாதியைப் பற்றிய அச்சத்தை தமது வீடுகளில் இருந்து வெளியே பரப்புகின்றனர். இந்த அச்சத்தாலும் பலர் உயிரிழக்கின்றனர். தற்போதைய சூழலில், கொரோனா பற்றிய பயத்தைப் பரப்பாமல் இருப்பது நமது பொறுப்பு’ என்றார்.

    கொரோனா சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்கள் திருப்தி தெரிவிப்பதாகவும், ஆக்சிஜனுக்கோ, படுக்கைகளுக்கோ பற்றாக்குறை ஏதும் இல்லை என்றும் மந்திரி சுரேஷ் கன்னா கூறினார். மாநில அரசின் செயல்பாட்டால், கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பதாக அவர் கூறினார்.
    Next Story
    ×