search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இதுவரை 1952 பேர் உயிரிழப்பு, தினந்தோறும் 1000 பேர் பாதிப்பு: இந்திய ரெயில்வே அறிவிப்பு

    இந்திய ரெயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்களில் 1952 பேர் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியாவிலேயே... ஏன் உலகிலேயே அதிக ஊழியர்களை கொண்டதாக இந்திய ரெயில்வேத்துறை திகழ்ந்து வருகிறது. கொரோனா காலக்கட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல ரெயில்வேதுறைதான் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், அவசர நேரத்தில் ரெயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாகவும் மாற்றிக் கொடுக்கிறது.

    இதற்கிடையில் கொரோனா தொற்றால் இதுவரை 1952 ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், தினந்தோறும் 1000 பேர் பாதிக்கப்படுவதாகவும், ரெயில்வே தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக ரெயில்வே மருத்துவமனைகளில் 4000 படுக்கைகள் தயார்நிலையில் இருப்பதாகவும் ரெயில்வேதுறை சேர்மன் சுனீத் சர்மா தெரிவித்துள்ளார்.

    கோப்புப்படம்

    இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, அதில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து மீண்டும் பணியில் சேர்ந்துள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×