search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா தொற்று பரவலால் காளஹஸ்தியில் நாளை முதல் ராகு,கேது பரிகார பூஜைகள் ரத்து

    ஆர்ஜித சேவையில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என காளஹஸ்தி கோவில் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திராவில் நாள்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    சித்தூர் மாவட்டத்தில் தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்து வருகிறது. இதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. எப்போதும் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும் ஏழுமலையான் கோவில் வெறிச்சோடி காணப்படுகிறது.

    இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு காளஹஸ்தி சிவன் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) முதல் ராகு, கேது சர்ப்பதோ‌ஷ பரிகார பூஜைகள் ரத்து செய்யப்படுகிறது. காலை 6 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும் பக்தர்கள் சார்பில் நடத்தப்பட்டு வந்த ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டு கோவில் சார்பில் மட்டுமே ஆர்ஜித சேவைகள் நடைபெற உள்ளன.

    ஆர்ஜித சேவையில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என காளஹஸ்தி கோவில் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×