search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    ஆக்சிஜன் தொட்டிகள், கொரோனா மருந்துகளுக்கு வரிவிலக்கு தேவை- பிரதமருக்கு மம்தா கடிதம்

    மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்ற பிறகு, கொரோனா நெருக்கடி தொடர்பாக பிரதமருக்கு மூன்று முறை கடிதம் எழுதியிருக்கிறார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பல்வேறு அமைப்புகள், தனிநபர்கள் மற்றும் ஏஜென்சிகள் மேற்கு வங்காளத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் சேமிப்பு தொட்டிகள் மற்றும் கொரோனா மருந்துகளை வழங்குகின்றன. அவர்களில் பெரும்பாலான நன்கொடையாளர்கள், மாநில அரசை அணுகி, அவர்கள் அனுப்பும் பொருட்களுக்கான சுங்க வரி மற்றும் ஜிஎஸ்டி வரிகளில் இருந்து விலக்கு அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர். 

    பிரதமர் மோடி

    இந்த வரி விதிப்புகள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது. எனவே, நன்கொடையாளர்கள் அனுப்பும்  இத்தகைய பொருட்களுக்கு ஜிஎஸ்டி, சுங்க வரி மற்றும் பிற வரிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, கொரோனா நெருக்கடி தொடர்பாக பிரதமருக்கு மூன்று முறை கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×