search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண்
    X
    மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண்

    நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு 21,57,000 பேருக்கு சிகிச்சை - மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண்

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,95,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாது அலை சுனாமி அலை போல பெரும்பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,95,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,56,16,130 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 2,023 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,82,553 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 21,57,538 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    கோப்புபடம்

    இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 21,57,00 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த ஆண்டில் உள்ள கொரோனா சிகிச்சையின் இரு மடங்கு ஆகும். இதுவரை 13 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் சுமார் 87% சுகாதார ஊழியர்கள் மற்றும் 79% முன்கள பணியாளர்கள் கொரோனா தடுப்பூசிகளின் முதல் டோஸ் போட்டுள்ளனர் என கூறினார்.

    Next Story
    ×