search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் புகைப்படம்
    X
    வைரல் புகைப்படம்

    சோக கதையுடன் வலம் வரும் சிறுவனின் புகைப்படம்

    ஊரடங்கு காரணமாக சிறுவன் தனது சகோததருடன் இணைந்து முகக்கவசம் விற்பனை செய்கிறான்.


    கொரோனாவைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ளது. நாடு முழுக்க கொரோனா தொற்றால் பாதிக்கபடுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சிறுவன் முகக்கவசம் வினியோகம் செய்யும் புகைப்படம் சோக கதையுடன் வைரலாகி வருகிறது.

    பணம் இல்லாதவர்களுக்கு புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் இலவசமாக முகக்கவசம் வழங்குவதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் இதனை தன் தாய் கூறியதால் செய்து வருவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அதனுடன் வலம்வரும் சோக கதை உண்மையில்லை என தெரியவந்துள்ளது. புகைப்படத்தில் இருப்பது ஏழு வயதான சிறுவன் ஆகும். இந்த சிறுவன் தனது சகோதரர் உடன் இணைந்து பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் வீதியில் நின்று முகக்கவசம் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. 

    இந்த சிறுவனின் புகைப்படம் பல்வேறு பாகிஸ்தான் வலைதளங்கள் மற்றும் சர்வதேச வலைதளங்களில் பதிவிடப்பட்டு இருக்கிறது. உண்மையில் இந்த புகைப்படத்தை செய்தி நிறுவனம் ஒன்று எடுத்து இருக்கிறது. அந்த வகையில் வைரல் புகைப்படத்திற்கும் அதனுடன் வலம்வரும் கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×