search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரகாண்ட் கல்வி மந்திரி அரவிந்த் பாண்டே
    X
    உத்தரகாண்ட் கல்வி மந்திரி அரவிந்த் பாண்டே

    உத்தரகாண்ட் மாநிலத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து

    உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. 

    இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கல்வித்துறை மந்திரி அரவிந்த் பாண்டே இன்று வெளியிட்டுள்ளார்.

    நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

    உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது, 12ம் வகுப்பு தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×