search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தினமும் 7 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டியது அவசியம் - சுகாதாரத்துறை மந்திரி

    மராட்டியத்தில் நோய் பரவலை கட்டுபடுத்த அரசு அதிகளவில் கொரோனா தடுப்பூசிகளை தகுதியானவர்களுக்கு போட்டு வருவதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.
    மும்பை:

    மராட்டியத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நோய் பரவலை கட்டுபடுத்த அரசு அதிகளவில் கொரோனா தடுப்பூசிகளை தகுதியானவர்களுக்கு போட்டு வருகிறது. இந்தநிலையில் மாநிலத்தில் தடுப்புமருந்து பற்றாக்குறை உள்ளதாக அரசு தெரிவித்து உள்ளது. மேலும் அதிகளவில் தடுப்பு மருந்தை தருமாறு மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது.

    இந்தநிலையில் மாநிலத்தில் தொற்று பரவலை கட்டுபடுத்த தினமும் 7 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என மாநில சுகாதாரத்துறை மந்திரி  கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    ராஜேஷ் தோபே

    மராட்டியத்தில் தினமும் 6 முதல் 7 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். இதுமாநிலத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்த பெரிய நடவடிக்கையாக அமையும். மத்திய அரசிடம் இருந்து அதிக தடுப்பு மருந்தை பெற அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் டெல்லிக்கு செல்வார்கள் என நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×