search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி- அமித்ஷா
    X
    பிரதமர் மோடி- அமித்ஷா

    மேற்குவங்காளத்தில் இன்று பிரதமர் மோடி, அமித்ஷா பல இடங்களில் பிரசாரம்

    மேற்கு வங்காளத்தில் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் பா.ஜனதா உள்ளது. அதே நேரத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் மம்தா பானர்ஜி உள்ளார்.

    கொல்கத்தா:

    மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது.

    முதல்கட்டமாக கடந்த மாதம் 27-ந் தேதி 30 தொகுதிக்கும், 2-வது கட்டமாக கடந்த 1-ந் தேதி 30 இடங்களுக்கும், 3-வது கட்டமாக 6-ந் தேதி 31 தொகுதிகளுக்கும், 4-வது கட்டமாக 10-ந் தேதி 44 தொகுதிக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.

    5-வது கட்டமாக வருகிற 17-ந் தேதி 45 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் இன்று மேற்குவங்காளத்தின் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்கிறார்கள்.

    பர்தாமன் மாவட்டம் புர்பாவில் உள்ள தலித்சாய் மையத்திலும், நாடியா மாவட்டம் கல்யாணி பல்கலைக்கழக மைதானத்திலும், பர்கான்ஸ் மாவட்டம் பராசாத் பகுதியிலும் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் மோடி பேசுகிறார்.

    அமித்ஷா கலிம்போங் மாவட்டத்தில் ‘ரோடு ஷா’ நடத்துகிறார். ஜல்பாய் புரி மாவட்டம் துகுரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அவர் பேசுகிறார்.

    4-வது கட்ட வாக்குப் பதிவின் போது வன்முறை ஏற்பட்டது. பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் பலியானார்கள். இது தொடர்பாக பா.ஜனதாவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன.

    மேற்கு வங்காளத்தில் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் பா.ஜனதா உள்ளது. அதே நேரத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் மம்தா பானர்ஜி உள்ளார்.

    Next Story
    ×