search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல்- பயணிகள் ரெயில்கள் இயக்கப்படாது

    முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே ரெயில்வே பிளாட்பாரங்களில் நிற்க அனுமதிக்கப்படுவார்கள். 45 வயதுக்கு மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்த படும் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

    கேரள ரெயில் நிலையங்களில் வெளிமாநில தொழிலாளிகள் ஏராளமானோர் திரண்டு நிற்பது போலவும் சமூக வலைதளங்களில் காட்சிகள் வெளியானது.

    இந்த காட்சிகள் கடந்த ஆண்டு ஊரடங்கு காலத்தில் வெளியான காட்சிகள் என்றும், இப்போது அது போன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை எனவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட மேலாளர் முகுந்த் கூறியதாவது:-

    கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தாலும், இப்போது இயக்கப்படும் ரெயில்கள் எதுவும் நிறுத்தப்படாது. அதே நேரம் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தால் கூடுதல் ரெயில்கள் இயக்குவது பற்றி ஆலோசித்து முடிவு செய்வோம். ஆனால் இப்போதைக்கு பயணிகள் ரெயில்கள் இயக்கப்படாது.

    இது தொடர்பான எந்த முடிவும் ரெயில்வே வாரியம் எடுக்கவில்லை. ரெயில்களில் பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே ரெயில்வே பிளாட்பாரங்களில் நிற்க அனுமதிக்கப்படுவார்கள். 45 வயதுக்கு மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×