search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கொரோனா பரவல்: காஷ்மீரில் நாளை முதல் 2 வாரம் பள்ளிகள் மூடல் - புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

    கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஜம்மு மற்றும் காஷ்மீரில் 2 வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    ஸ்ரீநகர்:

    இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.யூனியன் பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த 2 நாட்களில் தினசரி பாதிப்பு 500-க்கும் அதிகமாக உள்ளது.

    அங்கு இதுவரை கொரோனாவால் 1 லட்சத்து 32 ஆயிரத்து 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக 2 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 2,005-ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஜம்மு மற்றும் காஷ்மீரில் 2 வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு நாளை முதல் ஏப்ரல் 18-ந் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு நாளை முதல் 11-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    கொரோனா பரவலையொட்டி புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விழா மற்றும் நிகழ்ச்சிகளில் 200 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×