search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி சுரேஷ்குமார்
    X
    மந்திரி சுரேஷ்குமார்

    தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும், மருத்துவ காப்பீடு: மந்திரி சுரேஷ்குமார்

    கர்நாடகத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களை ஜோதி சஞ்சீவினி மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடக தொடக்க பள்ளி ஆசிரியர்கள் சங்கம், தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் பிரதிநிதிகள் கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பேசுகையில் கூறியதாவது:-

    கொரோனா பரவல் காரணமாக தனியார் பள்ளி ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக ஆசிரியர்கள் நல நிதி மூலம் ஆசிரியர்களுக்கு உதவிகள் வழங்கப்படுகிறது. இந்த நல நிதி குழுவில் தனியார் பள்ளி ஆசிரியர்களும் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள்.

    இதன் மூலம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கிடைக்கும் உதவிகள் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் கிடைக்கும். அவர்களை உறுப்பினர்களாக சேர்ப்பது தொடர்பான விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அந்த விதிமுறைகள் வெளியிடப்படும். அரசின் நிதி உதவியின் கீழ் தனியார் கன்னட பள்ளிகளை சேர்க்குமாறு முதல்-மந்திரியிடம் கூறினேன். ஆனால் கொரோனா நெருக்கடி காரணமாக அவற்றுக்கு நிதி ஒதுக்க முடியவில்லை.

    1995-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரையில் தொடங்கப்பட்ட கன்னட பள்ளிகள் இந்த நிதி உதவியின் கீழ் வரும். இந்த காலக்கட்டத்தில் தனியாரால் 685 தொடக்க பள்ளிகள், 211 உயர்நிலைப்பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் இந்த திட்டத்திற்கு ரூ.138 கோடி நிதி தேவைப்படுகிறது. தனியார் பள்ளி ஆசிரியர்களை ஜோதி சஞ்சீவினி மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கு நிதித்துறையின் ஒப்புதல் தேவை. அந்த நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு சுரேஷ்குமார் பேசினார்.
    Next Story
    ×