search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயிற்சியின்போது துல்லியமாக தாக்கப்பட்ட இலக்கு
    X
    பயிற்சியின்போது துல்லியமாக தாக்கப்பட்ட இலக்கு

    அதே பைலட்டுகள்... ஆனால் இலக்கு வேறு: பாலகோட் தாக்குதலை நினைவுபடுத்திய விமானப்படை பயிற்சி

    பாலகோட் தாக்குதல் நடத்திய விமானப்படை பைலட்டுகள் மீண்டும் அதேபோன்ற நீண்ட தூர இலக்கை தாக்கி ஒத்திகை பார்த்தனர்.
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படை விமானங்கள் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடந்து, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் ஊடுருவி தாக்குதல் நடத்தி, அங்குள்ள பயங்கரவாத முகாம்களை அழித்தன. பிப்ரவரி 14ம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 40 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சில நாட்களில் இந்த பாலகோட் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த தாக்குதல் நடந்து இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, பால்கோட் மீது குண்டு வீசிய அதே விமானப்படை பைலட்டுகள் நீண்ட தூர இலக்கை குண்டுவீசி அழிக்கும் பயிற்சி மேற்கொண்டனர். பாலகோட் தாக்குதலை நினைவுபடுத்தும் வகையில் இந்த பயிற்சி இருந்தது. இன்று நடைபெற்ற பயிற்சியில் விமானப்படை தளபதி பதூரியா  பங்கேற்று, போர் விமானத்தில் பறந்து பயிற்சி மேற்கொண்டார்.

    பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்ட போர் விமானங்கள்

    பாலகோட் தாக்குதலுக்கு மறுநாள், இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் நாட்டு போர் விமானத்தை விரட்டிச் சென்றபோது, இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபினந்தன் ஓட்டிச் சென்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்த அபினந்தன், பாகிஸ்தான் பகுதியில் தரையிறங்கியதால் அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கினார். சுமார் 60 மணி நேர கஸ்டடிக்கு பிறகு அவரை பாகிஸ்தான் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×