search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் மந்திரி மம்தா பானர்ஜி
    X
    முதல் மந்திரி மம்தா பானர்ஜி

    மோடியும் - ஷாவும் நாட்டை விற்கிறார்கள். இது மக்கள் விரோத அரசு - மம்தா பானர்ஜி

    மோடியும் மற்றும் அமித் ஷாவும் நாட்டை விற்கிறார்கள். இது மக்கள் விரோத அரசாங்கமாகும் என பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் நேற்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நாட்டில் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்திருந்தாலும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. மேற்கு வங்காளத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே லிட்டருக்கு ரூ .91.12 ஆகவும், லிட்டருக்கு ரூ .84.20 ஆகவும் உயர்ந்துள்ளது.

    எரிபொருள் விலை உயர்வுக்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். மோடி அரசாங்கம் தவறான வாக்குறுதிகளை மட்டுமே அளிக்கிறது. எரிபொருள் விலையை குறைக்க அவர்கள் எதுவும் செய்யவில்லை.

    எரிபொருள்களின் விலைகளை தொடர்ந்து உயர்த்தி வருகின்றனர். மோடி அரசு நாட்டில் உள்ள அனைத்தையும் விற்பனை செய்கிறது. மோடியும் ஷாவும் நாட்டை விற்கிறார்கள். இது மக்கள் விரோத அரசாகும். பி.எஸ்.என்.எல். முதல் நிலக்கரி வரை நாட்டில் உள்ள அனைத்தும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த அரசு, மக்கள் எதிர்ப்பு, இளைஞர் எதிர்ப்பு மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு அரசாக உள்ளது என தெரிவித்தார்.

    பெட்ரோல் விலை உயர்வைக் கண்டிக்கும் வகையில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டரி பொருத்தப்பட்ட மின்னணு இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×