search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா நெருக்கடியால் மேற்கு ரெயில்வேயின் வருவாயில் ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு

    கொரோனா நெருக்கடி காரணமாக ஆண்டு வருமானத்தில் 5,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக மேற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    இந்தூர்:

    கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாடு முழுவதும் பயணிகள் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.

    அதன் பின்னர் பல மாதங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டின் இறுதியில் ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.‌ ஆனாலும் கொரோனா குறித்த பயம் காரணமாக மக்களில் சிலர் ரெயிலில் பயணம் செய்வதை தவிர்த்து வருகின்றனர்.‌

    இந்த நிலையில் கொரோனா நெருக்கடி காரணமாக ஆண்டு வருமானத்தில் 5,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக மேற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் பத்திரிகையாளர்களை சந்தித்த மேற்கு ரெயில்வேயின் பொது மேலாளர் அலோக் கன்சால் கூறுகையில், “கொரோனா வைரசுக்கு பயந்து ரெயிலில் பயணிக்க பலர் இன்னமும் தயக்கம் காட்டுகிறார்கள். இதனால் மேற்கு ரெயில்வேயின் கீழ் இயக்கப்படும் சில ரெயில்கள் வெறும் 10 சதவீத பயணிகளுடன் இயங்குகின்றன. இதன் காரணமாக நாங்கள் ஆண்டுக்கு ரூ.5,000 கோடி இழப்பை சந்தித்துள்ளோம்” என கூறினார்.
    Next Story
    ×