search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்களவை
    X
    மக்களவை

    மக்களவை மார்ச் 8ம் தேதி வரை ஒத்திவைப்பு

    மக்களவை கூட்டத்தொடரின் முதற்கட்ட அமர்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவை மார்ச் 8ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை இரண்டு அமர்வுகளாக நடத்த திட்டமிடப்பட்டது. முதல் அமர்வை ஜனவரி 29 முதல் பிப்ரவரி 15-ஆம் தேதி வரையிலும், இரண்டாவது அமர்வை மார்ச் 8-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ஆம் தேதி வரையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டது. 

    அதன்படி மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29-ஆம் தேதி தொடங்கியது. அப்போது பாராளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அன்றைய தினமே பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மத்திய ஆய்வறிக்கையின் மீதான விவாதம் நடைபெற்றது. பின்னா் 2 நாட்கள் முன்னதாக, பிப்ரவரி 13-ஆம் தேதியுடன் முடித்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. 

    இதனிடையே, மாநிலங்களவையின் சனிக்கிழமை அமா்வு ரத்து செய்யப்பட்டு, நேற்று கூட்டத் தொடரின் முதல் அமர்வு நிறைவு செய்யப்பட்டது.

    இந்நிலையில் மக்களவையின் முதற்கட்ட அமர்வு இன்று நிறைவடைந்ததையடுத்து அவை மார்ச் 8ஆம் தேதி மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
    Next Story
    ×