search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஞ்சய் ராவத், பகத்சிங் கோஷ்யாரி,
    X
    சஞ்சய் ராவத், பகத்சிங் கோஷ்யாரி,

    கவர்னருக்கு விமானம் மறுக்கப்பட்ட விவகாரம்: சஞ்சய் ராவத் எம்.பி. விளக்கம்

    கவர்னருக்கு விமானம் மறுக்கப்பட்ட விவகாரத்தில் மாநில அரசு விதிமுறைகளை பின்பற்றி உள்ளது என்று சஞ்சய் ராவத் எம்.பி. கூறினார்.
    மும்பை :

    மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு அரசு விமானத்தில் செல்ல மாநில அரசு மறுத்து உள்ளது. இதையடுத்து அவர் பயணிகள் விமானத்தில் டேராடூனுக்கு சென்றார்.

    இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:-

    நாங்கள் கவர்னரை மதிக்கிறோம். அரசு விதிகளை பின்பற்றி உள்ளது. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுடன் பேசும்போது இது மட்டுமே எனக்கு தொியவந்தது. கவர்னர் தனது சொந்த வேலைகளுக்கு அரசு விமானத்தை பயன்படுத்த விரும்பினால், சில விதிகளை அரசு மீறவேண்டியது இருக்கும். இந்த விவகாரத்தில் மத்திய உள்துறையின் நடைமுறைகளை தான் அரசு பின்பற்றி உள்ளது.

    விமான விவகாரத்தில் நீங்கள் (கவர்னர்) அவமதிக்கப்பட்டதாக கருதினால், மந்திரி சபையால் பரிந்துரை செய்யப்பட்ட 12 எம்.எல்.சி.களின் நியமனம் விவகார அவமதிப்பை என்ன சொல்வது?"

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×