search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலா சீதாராமன்
    X
    நிர்மலா சீதாராமன்

    மத்திய பட்ஜெட்- நாடு முழுவதும் 100 புதிய சைனிக் பள்ளிகள்

    பள்ளி கல்வித்துறையில் 100 புதிய சைனிக் பள்ளிகள் உருவாக்கப்படும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் இன்று 2021-2022ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    பள்ளி கல்வி துறையில் 100 புதிய சைனிக் பள்ளிகள் உருவாக்கப்படும். புதிய கல்வி கொள்கைப்படி 15 ஆயிரம் பள்ளிகளை மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    லடாக்கின் லே பகுதியில் புதிய மத்திய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். உயர்கல்வி துறைக்கு புதிய குழு அமைக்கப்படுகிறது.

    தேசிய மொழிகளை மொழிபெயர்ப்பதற்கான புதிய திட்டம் உருவாக்கப்படும். அரசின் அறிவிப்புகள், திட்டங்கள் அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்யப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×