search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்துறை மந்திரி அமித்ஷா
    X
    உள்துறை மந்திரி அமித்ஷா

    உள்துறை மந்திரி அமித்ஷாவின் மேற்கு வங்காள பயணம் ரத்து

    உள்துறை மந்திரி அமித் ஷா தனது 2 நாள் மேற்கு வங்காள பயணத்தை ரத்து செய்துள்ளார்.
    புதுடெல்லி:

    மேற்கு வங்காள மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. மம்தா பானர்ஜி முதல் மந்திரியாக இருந்து வருகிறார்.

    கடந்த சில தினங்களாக அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மந்திரிகள் ஆளும் கட்சி மீது அதிருப்தியில் இருந்து வருகின்றனர். ஆளும் கட்சிக்கும் அரசாங்கத்திற்கு எதிராகவும் பேசி வருகின்றனர்.

    உள்துறை மந்திரி அமித்ஷா மேற்கு வங்காளத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்திருந்தார். 

    இதற்கிடையே, டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே திடீரென குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் யாருக்கும் காயமில்லை.

    இந்நிலையில், உள்துறை மந்திரியும், பா.ஜ.க. தலைவருமான அமித்ஷா, தனது 2 நாள் மேற்கு வங்காள பயணத்தை ரத்து செய்துள்ளார் என அம்மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×