search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சீரம் நிறுவனத்திடம் இருந்து 1.1 கோடி கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம்

    சீரம் நிறுவனத்திடம் இருந்து முதல்கட்டமாக 1 கோடியே 10 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த தடுப்பூசிகள் இன்று இரவு அல்லது நாளை காலை புனேவில் உள்ள சீரம் நிறுவனத்த்தில் இருந்து வெளியேற்றப்படுகிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா உருவாக்கியுள்ள கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய மருத்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதி அளித்தது.
     
    இதையடுத்து, நாடு முழுவதும் வரும் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. முதல்கட்டமாக சுகாதார ஊழியர்கள், முன்கள ஊழியர்களான போலீசார், பாதுகாப்பு படையினர் என மொத்தம் 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட உள்ளது.

    இந்நிலையில், சீரம் நிறுவனத்திடம் இருந்து முதல்கட்டமாக 1 கோடியே 10 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த தடுப்பு மருந்து ஒரு டோஸ் 200 ரூபாய் என்ற விலையில் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

    இந்த தடுப்பூசிகள் இன்று இரவு அல்லது நாளை காலை புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் இருது வெளியேற்றப்பட உள்ளது.     

    நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டும் பணி 16-ம் தேதி நடைபெற உள்ளதால் அதற்கு முன் தடுப்பூசி வினியோகத்தை துரிதமாக மேற்கொண்டு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி கிடைக்கச்செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையில் சீரம் நிறுவனமும் பங்கேற்றுள்ளது.
    Next Story
    ×