search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிராக்டர் பேரணி
    X
    டிராக்டர் பேரணி

    குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணியை அனுமதிக்கலாமா? -முடிவை போலீசிடம் ஒப்படைத்த உச்ச நீதிமன்றம்

    டெல்லியில் குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணிக்கு விவசாயிகளை அனுமதிப்பதா, வேண்டாமா? என்பதை போலீஸ் முடிவு செய்யும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
    புதுடெல்லி:

    மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி திமுக எம்பி திருச்சி சிவா, ஆர்ஜேடி எம்பி மனோஜ் ஜா உள்ளிட்டோர் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு விசாணை நடத்தியது.

    அப்போது, விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க அரசு முடிவு எடுக்காவிட்டால் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் என தலைமை நீதிபதி பாப்டே எச்சரித்தார்.

    அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், குடியரசு தின விழாவின்போது, விழாவை சீர்குலைப்பதற்காக 2000 டிராக்டர்களில் விவசாயிகள் டெல்லி ராஜபாதைக்கு வர உள்ளதாகவும், அதனை நிறுத்தும்படி நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த நீதிபதிகள், டெல்லிக்குள் விவசாயிகளை நுழைய விடுவது பற்றி கோர்ட் முடிவு எடுக்காது என்றும், அது போலீசின் முடிவு என்றும் கூறினர்.

    அப்போது, சில விவசாய சங்கங்கள் சார்பில் ஆஜரான வாக்கறிஞர் துஷ்யந்த் தவே, ஜனவரி 26ம் தேதி டெல்லியில் டிராக்டர் பேரணியை நடத்த வேண்டாம் என விவசாயிகள் திட்டமிட்டுவருவதாக கூறினார்.
    Next Story
    ×