search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யோகி ஆதித்யநாத்
    X
    யோகி ஆதித்யநாத்

    2020-ம் ஆண்டின் சிறந்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் - கருத்து கணிப்பில் தகவல்

    2020-ல் நாட்டின் சிறந்த முதல்-மந்திரிகள் யார்? என்பது தொடர்பாக நடத்திய கருத்து கணிப்பில் 7 மாநிலங்களின் முதல்-மந்திரிகளை முந்தி யோகி ஆதித்யநாத் முதலிடத்தை பிடித்துள்ளார்.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்-மந்திரியான யோகி ஆதித்யநாத் 2020-ம் ஆண்டின் மிகச் சிறந்த மற்றும் திறமையான முதல்-மந்திரி என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

    2020-ல் நாட்டின் சிறந்த முதல்-மந்திரிகள் யார்? யார்? என்பது தொடர்பாக தனியார் செய்தி சேனல் ஒன்று நடத்திய இந்த கருத்து கணிப்பில் 7 மாநிலங்களின் முதல்-மந்திரிகளை முந்தி யோகி ஆதித்யநாத் முதலிடத்தை பிடித்துள்ளார்.

    யோகி ஆதித்யநாத்தைத் தொடர்ந்து மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே 2-வது இடத்தை பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், மத்தியபிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.

    இதுபோன்ற கருத்து கணிப்புகளில் யோகி ஆதித்யநாத் முதலிடம் பெறுவது இது முதல் முறையல்ல. முன்னதாக கடந்த ஆண்டு செல்வாக்குமிக்க இந்தியர்களின் பட்டியலில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மிகவும் பிரபலமான முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பட்டியலில் அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்த படியாக 2-வது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×