search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமான சேவை (கோப்பு படம்)
    X
    விமான சேவை (கோப்பு படம்)

    பிரிட்டனுக்கான விமான போக்குவரத்து தடை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு -மத்திய அரசு

    புதிய வகை உருமாறிய கொரோனா பரவலால் பிரிட்டனுக்கான விமான போக்குவரத்து தடையை மத்திய அரசு மேலும் ஒரு வாரம் நீட்டித்துள்ளது.
    புதுடெல்லி:

    பிரிட்டனில் பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த உருமாறிய வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் அந்த நாட்டுடனான விமான போக்குவரத்தை இந்தியா உள்ளிட்ட  பல நாடுகள் தற்காலிகமாக தடை செய்துள்ளன. இந்தியாவில் டிசம்பர் 31ம் தேதி வரை விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    சமீபத்தில் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்கள், பிரிட்டனில் இருந்து வேறு நாடுகள் வழியாக இந்தியா வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதில் இந்தியா, இத்தாலி, பிரான்ஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு 
    உருமாறிய கொரோனா
     வைரஸ் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பிரிட்டன் நாட்டுடனான விமான போக்குவரத்து தடை, ஜனவரி 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.

    பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் இதுவரை 20 பேருக்கு புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மற்றவர்களுடைய மாதிரிகளின் ஆய்வு முடிவுகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×