search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்
    X
    பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்

    ‘ஆம் அல்லது இல்லை’ என்ற பதிலை விவசாயிகள் எதிர்பார்க்கக் கூடாது -ராஜ்நாத் சிங்

    வேளாண் சட்டங்கள் தொடர்பாக பிரிவு வாரியாக விவாதிக்க வேண்டும் என்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் மத்திய அரசு இதுவரை 5 சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனையடுத்து விவசாய சங்கங்களின் நிர்வாகிகளுடன் மத்திய அரசு இன்று 6ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. 

    இன்றைய பேச்சுவார்த்தையிலும் விவசாய சங்க நிர்வாகிகள், சட்டத்திருத்தம் செய்ய ஒப்புக்கொள்ளாமல் சட்டங்களை முழுமையாக திரும்ப பெற வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அளித்த பேட்டி வருமாறு:-

    சில சக்திகள் விவசாயிகளிடையே சில தவறான கருத்துக்களை உருவாக்க முயற்சி செய்தன. ஏராளமான விவசாயிகளிடம் நாங்கள்  பேசியுள்ளோம். விவசாயிகளிடம் நான் வைக்கும் ஒரே வேண்டுகோள் என்னவென்றால், வேளாண் சட்டங்களின் பிரிவு வாரியாக பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வரவேண்டும், ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்ற பதிலை எதிர்பார்க்கக்கூடாது. பிரச்சனைக்கு நாங்கள் ஒரு நல்ல தீர்வை கண்டுபிடிப்போம்.

    விவசாயிகள் மீது  அரசுக்கு அக்கறை இல்லை என்ற கேள்விக்கே இடமில்லை. நமது விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களின் நிலை குறித்து நான் மட்டுமல்ல, பிரதமர் நரேந்திர மோடியும் வேதனை அடைந்துள்ளார். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×