search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி சுரேஷ்குமார்
    X
    மந்திரி சுரேஷ்குமார்

    10-ம் வகுப்பு, பி.யூ.கல்லூரி வகுப்புகள் தொடங்குவது குறித்து விரைவில் முடிவு: மந்திரி சுரேஷ்குமார்

    10-ம் வகுப்பு, பி.யூ.கல்லூரி வகுப்புகள் தொடங்குவது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.
    பெங்களூரு :

    தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு சுரேஷ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஆண்டுதோறும் பெற்றோர் தங்களின் குழந்தைகளை சேர்க்கையை பதிவு செய்ய வேண்டும். இதில் பெற்றோர் அலட்சியமாக இருக்கக்கூடாது. கொரோனா பரவல் காரணமாக தங்களின் குழந்தைகளை அடுத்த வகுப்பிற்கு பதிவு செய்யாமல் இருப்பது சரியான நடவடிக்கையாக இருக்காது. அதே போல் தனியார் பள்ளிகள், கல்வி கட்டணத்தை உயர்த்தக்கூடாது, முடிந்தால் கட்டணத்தை குறைக்க வேண்டும் மற்றும் தவணை முறையில் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். இதுபோன்ற மனிதநேயத்தை தனியார் பள்ளிகள் வெளிப்படுத்த வேண்டும்.

    கல்வி கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாக தனியார் பள்ளிகள், குழந்தைகளின் பெற்றோருடன் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். அதை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். கொரோனா பரவல் காரணமாக பள்ளி நிர்வாகங்கள் மற்றும் பெற்றோர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைவரின் நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

    இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகள் கல்வி கற்பித்தலை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது. நீண்ட காலம் குழந்தைகள் கற்றலில் இருந்து விடுபட்டு இருக்கக்கூடாது. அது நமது சமுதாயத்தின் மீது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். 10 மற்றும் பி.யூ.கல்லூரி வகுப்புகளை தொடங்குவது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். கொரோனா காலத்தில் குழந்தைகளின் உயிரை பாதுகாப்பது தான் முக்கியம். அதனால் தான் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை.

    இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.
    Next Story
    ×