search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்தி தேசாய்
    X
    திருப்தி தேசாய்

    திருப்தி தேசாய் சீரடியில் நுழைய தடை

    சீரடி பகுதியின் துணை மண்டல மாஜிஸ்திரேட்டு கோவிந்த் ஷிண்டே, சட்டம், ஒழுங்கு பிரச்சினை காரணமாக திருப்தி தேசாய் சீரடிக்குள் நுழைய வேண்டாம் என உத்தரவிட்டுள்ளார்.
    புனே :

    சீரடியில் பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவில் அறக்கட்டளை நிர்வாகம் சார்பில் சமீபத்தில் அறிவிப்பு பலகை ஒன்று கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டது. இதில் பக்தர்கள் நாகரிக ஆடை அல்லது இந்திய பாரம்பரிய உடையணிந்து கோவிலுக்கு வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வீடியோ வெளியிட்டு கோவில் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தார். அதில் அவர், கோவிலில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையை அகற்றவில்லையென்றால், வருகிற 10-ந் தேதி தனது ஆதரவாளர்களுடன் கோவிலுக்கு வந்து நானே பதாகையை அகற்றுவேன் என கூறினார். மேலும் அவர் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதினார்.

    இந்தநிலையில் சீரடி பகுதியின் துணை மண்டல மாஜிஸ்திரேட்டு கோவிந்த் ஷிண்டே, திருப்தி தேசாய்க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை காரணமாக 8-ந் தேதி முதல் 11-ந் தேதி நள்ளிரவு வரை அகமதுநகர் மாவட்டம் சீரடிக்குள் நுழைய வேண்டாம் என உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×