search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கபில் சிபல்
    X
    கபில் சிபல்

    பாராளுமன்றத்தை மட்டும் மாற்றினால் போதுமா? -பிரதமர் மோடியை விமர்சித்த கபில் சிபல்

    பிரதமர் மோடி தனது செயல்முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் சுமார் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.971 கோடி செலவில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. இதன் பூமி பூஜை வரும் 10-ந் தேதி நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். விழாவில் பங்கேற்கும்படி அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது. இதில் சிலர் நேரில் கலந்துகொள்வார்கள், மற்றவர்கள் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ள மோடியை கேலி செய்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் விமர்சனம் செய்துள்ளார்.

    ‘டிசம்பர் 10ம் தேதி மோடி அவர்கள் புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். கம்பீரமான மாளிகையை மாற்றுவது மட்டும் போதாது, நீங்கள் செயல்படும் முறையையும் மாற்றவும்!’ என கபில் சிபல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×