search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனைத்துக் கட்சி கூட்டம்
    X
    அனைத்துக் கட்சி கூட்டம்

    விரைவில் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும்- அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி தகவல்

    விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்தவுடன் இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து போடும் பணி விரைவாக தொடங்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    மக்களவை, மாநிலங்களவை கட்சி தலைவர்கள் பங்கேற்கும் அனைத்துக் கட்சிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் நிலவரம், கொரோனா தடுப்பூசி விவகாரம், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    காணொளி ஆலோசனையில் மக்களவை, மாநிலங்களவை தலைவர்கள், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ வர்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், இந்தியாவில் மொத்தம் 8 தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளதாகவும் இன்னும் சில வாரங்களில் தயாராகிவிடும் என்றும் தெரிவித்தார். 

    ‘மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியை முதலில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்கள், முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படும். தடுப்பு மருந்து விலை குறைவாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்தவுடன் இந்தியாவில் தடுப்பு மருந்து போடும் பணி விரைவாக தொடங்கும்’ என்றும் பிரதமர் கூறினார்.

    மேலும், அனைத்துக் கட்சி தலைவர்களும் தங்கள் பரிந்துரைகளை எழுத்துப்பூர்வமாக அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொண்ட பிரதமர், அந்த பரிந்துரைகள் தீவிரமாக பரிசீலிக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
    Next Story
    ×