search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிங்கு எல்லையில் பிரார்த்தனை செய்த விவசாயிகள்
    X
    சிங்கு எல்லையில் பிரார்த்தனை செய்த விவசாயிகள்

    குருநானக் ஜெயந்தி... போராட்டக் களத்தில் பிரார்த்தனை செய்த விவசாயிகள்

    குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு சீக்கிய மதத்தைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் பகுதிகளிலேயே பிரார்த்தனை செய்தனர்.
    புதுடெல்லி:

    சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக்கின் பிறந்த நாளை சீக்கியர்கள் மிக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.  அவ்வகையில் குருநானக் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குருத்வாராக்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. 

    இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான சீக்கிய விவசாயிகள் போராட்டக்களத்தில் இருப்பதால் அவர்களால் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. இதனால் போராட்டம் நடத்தி வரும் பகுதிகளிலேயே பிரார்த்தனை செய்தனர். பிரசாதம் செய்து அதை படையலிட்டு, பின்னர் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர்.

    திக்ரி எல்லையில் (டெல்லி -அரியானா எல்லை) பிரார்த்தனை செய்த விவசாயிகள், அனைவருக்கும் பிரசாதம் வழங்கினர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும் பிரசாதம் கொடுத்து மகிழ்ந்தனர். 
    Next Story
    ×