search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்எல்ஏ கிரண் மகேஷ்வரி
    X
    எம்எல்ஏ கிரண் மகேஷ்வரி

    பாஜக பெண் எம்எல்ஏ கொரோனாவுக்கு பலி- பிரதமர் மோடி இரங்கல்

    ராஜஸ்தான் மாநில பாஜக எம்எல்ஏ கிரண் மகேஷ்வரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநில பாஜக எம்எல்ஏ கிரண் மகேஷ்வரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரியானாவின் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களாக அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை எம்எல்ஏ கிரண் மகேஷ்வரி உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான உதய்பூருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்யப்பட உள்ளன. 

    எம்எல்ஏ கிரண் மகேஷ்வரி மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    மாநில முன்னேற்றம், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை மேம்படுத்துவதற்கு எம்எல்ஏ கிரண் மகேஷ்வரி பல முயற்சிகளை மேற்கொண்டதாக பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.
    Next Story
    ×