search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    மந்திரிசபை விரிவாக்கத்திற்கு அனைவரும் பொறுமை காக்க வேண்டும்: எடியூரப்பா

    மந்திரிசபை விரிவாக்கத்திற்கு நான், நீங்கள் உள்பட அனைவரும் பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
    பெங்களூரு :

    கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பா.ஜனதாவில் தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. மந்திரிசபை விஸ்தரிப்பு இன்னும் நடைபெறாததால் மந்திரி பதவியை எதிர்நோக்கி இருப்பவர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், “மந்திரிசபை விரிவாக்கத்திற்கு நான், நீங்கள் உள்பட அனைவரும் பொறுமையாக காத்திருக்க வேண்டும். எங்கள் கட்சி மேலிட தலைவர்கள் அழைத்தால் டெல்லி சென்று அதுகுறித்து விவாதிப்பேன். இதை தவிர தற்போதைக்கு என்னால் வேறு எதையும் கூற முடியாது“ என்றார்.

    அதன் பிறகு அவர் பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சித்ரதுர்காவுக்கு புறப்பட்டு சென்றார். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முதல்-மந்திரி இவ்வாறு கருத்து கூறி இருப்பதால், மந்திரி பதவிக்காக காத்திருப்பவர்கள், மேலும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மந்திரிசபை விரிவாக்க விஷயத்தில் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோசின் தலையீடு அதிகமாக உள்ளதால், இது தாமதமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதே வேளையில் மந்திரிசபை விரிவாக்கத்திற்கு மேலிடம் இன்னும் அனுமதி வழங்காததால், எடியூரப்பா கடும் அதிருப்தியில் உள்ளார் என்று சொல்லப்படுகிறது. மந்திரி சபையில் இடம் பெற பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி எழுந்துள்ளது.

    பதவி கிடைக்காதவர்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் நிலை உருவாகியுள்ளது. இது ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. அதனால் தான் பா.ஜனதா மேலிடம் தாமதித்து வருவதாக சொல்லப்படுகிறது.
    Next Story
    ×