
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4 ஆயிரத்து 454 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 7 ஆயிரத்து 216 பேர் குணம் அடைந்துள்ளனர். வைரஸ் தாக்குதலால் 121 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 34 ஆயிரத்து 317 ஆக உள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 88 ஆயிரத்து 476 ஆக உள்ளது. டெல்லியில் இதுவரை தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 512 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் இன்றைய நிலவரப்படி 37 ஆயிரத்து 329 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்