search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தண்ணீர் பாக்கெட்டால் தகராறு - கோஷ்டி மோதலில் வாலிபர் கொலை

    உத்தரபிரதேச மாநிலம் நிகழ்ந்த கோஷ்டி மோதலில் ஒருவர் மீது ஒருவர் கல்வீசி தாக்கிக்கொண்டதில் வாலிபர் பலியானார்.
    கான்பூர்:

    உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே வஜித்பூரை சேர்ந்தவர் நிஷாத் (வயது 25). இவர், நேற்று தன் நண்பர் சந்தீப்புடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையில் கிடந்த தண்ணீர் பாக்கெட்டை நிஷாத் மிதித்து விட்டார். இதனால் அதில் இருந்த தண்ணீர் பீய்ச்சி அடித்தது. அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த அமான் என்பவர் மீது தண்ணீர் பட்டு விட்டது. இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்து, 10-க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள் திரண்டனர். ஒருவர் மீது ஒருவர் கல்வீசி தாக்கிக்கொண்டனர். இதில், நிஷாத் உள்பட சிலர் காயமடைந்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில், நிஷாத் மரணமடைந்தார். இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை பிரயோகிக்க முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். பலியானவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். பணியில் அலட்சியமாக இருந்த 2 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர். உதவி போலீஸ் சூப்பிரண்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×