search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சடலமாக மீட்க்கப்பட்ட சிறுவனை படத்தில் காணலாம்
    X
    சடலமாக மீட்க்கப்பட்ட சிறுவனை படத்தில் காணலாம்

    200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் - 4 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

    மத்திய பிரதேசத்தில் 200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் 4 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    போபால்:

    எத்தனை முறை தான் கேட்பது ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளின் அழுகுரலை.. இன்னும் எத்தனை உயிர்களைத்தான் கண் முன்னே இழப்பது மூடப்படாத ஆழ்துளை கிணறுகளால்.. நிச்சயம் இதற்கு விடை காண வேண்டும்.

    மத்திய பிரதேச மாநிலம் நிவாரி மாவட்டம் பிருத்விப்பூர் பகுதியில் உள்ளது சேதுபுராபரா. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். இவரது 5 வயது மகன் பிரகால்த் விளையாடிக் கொண்டிருந்த போது கடந்த 4- ம்தேதி  அருகில் இருந்த மூடப்படாத 200 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.


    சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆழ்துளை கிணற்றை பார்த்துள்ளனர். அதில் சிறுவன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக காவல்துறைக்கும் தீயணைப்பு படைக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ராணுவம் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். 

     கடந்த 3 நாட்களாக  இரவு பகலாக ராணுவ வீரர்கள், மாநில மீட்பு குழுவினர் போராடினர். இன்று அதிகாலை 3 மணிக்கு சிறுவனை வெளியே எடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

    200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    Next Story
    ×