search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிபிஐ
    X
    சிபிஐ

    கேரளாவில் இனி மாநில அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ விசாரிக்க முடியாது

    கேரள மாநிலத்தில் சிபிஐ அமைப்பின் விசாரணைக்கு கட்டுப்பாடுகள் விதிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    நாடு முழுவதும் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த அமைப்பு மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. 

    இந்நிலையில், கேரளாவில் சிபிஐ விசாரணை நடத்துவதற்கு  அளிக்கப்பட்டிருந்த பொது ஒப்புதலை திரும்ப பெற  அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அமைச்சரவையின் இந்த முடிவால் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் சிபிஐ இனி புதிதாக வழக்குகளை பதிவு செய்யவோ, விசாரிக்கவோ முடியது.

    பாஜக ஆட்சியில் இல்லாத மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது கேரளாவிலும் சிபிஐ விசாரணைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×