search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பீகார் சட்டசபைக்கு 2-ம் கட்ட தேர்தல் - 94 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

    பீகார் சட்டசபைக்கு 2-ம் கட்டமாக 94 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலை தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் எதிர்கொள்கிறார்கள்.
    பாட்னா:

    243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு 3 கட்டமாக தேர்தல் நடந்து வருகிறது. இந்த தேர்தலை முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதீய ஜனதா கூட்டணி ஒரு அணியாகவும், எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மெகா கூட்டணி மற்றொரு அணியாகவும் சந்தித்து வருகின்றன. முதல் கட்டமாக கடந்த 28-ந் தேதி 71 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.

    இதில் 54 சதவீத வாக்குகள் பதிவாகின.

    இந்தநிலையில், பீகாரில் 2-ம் கட்டமாக பாட்னா, பாகல்பூர், நாலந்தா உள்பட 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடக்கிறது.

    இதில் ஆளும் கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்கள் 43 பேரும், பாரதீய ஜனதா வேட்பாளர்கள் 46 பேரும் களத்தில் உள்ளனர். மெகா கூட்டணி சார்பில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் வேட்பாளர்கள் 56 பேரும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 24 பேரும், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் தலா 4 பேரும் போட்டியிட்டு உள்ளனர்.

    2-ம் கட்ட தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்களும் களத்தில் இருக்கிறார்கள். குறிப்பாக மெகா கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளராக களம் இறக்கப்பட்டு உள்ள ராஷ்ட்டிரீய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், அவரது மூத்த சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ் மற்றும் நிதிஷ்குமார் மந்திரிசபையில் அங்கம் வகிக்கும் 4 மந்திரிகள் பலபரீட்சையில் உள்ளனர். இவர்கள் தவிர மொத்தம் 1,463 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    இந்த தொகுதிகளில் மொத்தம் 2 கோடியே 85 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1 கோடியே 35 லட்சம் பேர் பெண்கள். இரண்டாம் கட்ட தேர்தலை முன்னிட்டு 94 தொகுதிகளிலும் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நேற்றுமுன்தினம் மாலையுடன் ஓய்ந்தது.

    இதையடுத்து, 41 ஆயிரத்து 362 வாக்குச்சாவடி மையங்களில் பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்குப்பதிவு நடக் கிறது.
    Next Story
    ×