search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்தியதாக பெண் நீதிபதி பணிநீக்கம்

    உத்தரகாண்ட் மாநிலத்தில் வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்தியதாக சிவில் நீதிபதி தீபாலி சர்மா நேற்று பணிநீக்கம் செய்யப்பட்டார்.
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள மாவட்ட கோர்ட்டில் சிவில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் தீபாலி சர்மா. ஹரித்துவாரில் உள்ள அவரது வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை, 13 வயது சிறுமி, வீட்டு வேலை செய்து வந்தாள். அவளை பெண் நீதிபதி தீபாலி சர்மா சித்ரவதை செய்து வந்ததாக புகார் எழுந்தது.

    அதுகுறித்து ஹரித்துவார் மாவட்ட நீதிபதி ராஜேந்திரசிங் அளித்த அறிக்கை அடிப்படையில், 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம், தீபாலி சர்மா வீட்டில் சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரகாண்ட் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    போலீசார் சோதனையிட்டபோது, உடலில் காயங்களுடன் இருந்த சிறுமி மீட்கப்பட்டாள். நீதிபதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில், நீதிபதி இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரை பணிநீக்கம் செய்ய உத்தரகாண்ட் ஐகோர்ட்டின் முழு அமர்வு தீர்மானம் நிறைவேற்றியது. மாநில அரசு சிபாரிசின் பேரில், கவர்னரும் ஒப்புதல் அளித்ததால், சிவில் நீதிபதி தீபாலி சர்மா நேற்று பணிநீக்கம் செய்யப்பட்டார்.
    Next Story
    ×