search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்
    X
    பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்

    அங்கு விசாரணை இல்லை, இங்கு விசாரணை நடக்கிறது- மத்திய மந்திரி கேள்விக்கு பஞ்சாப் முதல்வர் பதில்

    பஞ்சாப் மாநிலத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை ராகுல் காந்தி சந்திக்காதது குறித்து மத்திய மந்திரி எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பதில் அளித்துள்ளார்.
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூரில் 6 வயதுச் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ராகுல் காந்தி ஏன் குரல் கொடுக்கவில்லை? என்றும், அவர் ஹோசியார்பூருக்கு பிக்னிக் செல்லவில்லையா? என்றும் மத்திய நிதி மந்திரி  நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார்.  

    ‘ஹத்ராஸ் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க ராகுல் காந்தியும், அவரின் சகோதரி பிரியங்கா காந்தியும் பிக்னிக் சென்றார்கள். அந்தக் கிராமத்துக்கு ஓடோடிச் சென்று அண்ணனும் தங்கையும் ஆறுதல் தெரிவித்தார்கள். ஆனால், பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூருக்கும், ராஜஸ்தானுக்கும் ஏன் இருவரும் செல்லவில்லை? குறிப்பிட்ட கொடுமைகளுக்கு மட்டும்தான் காங்கிரஸ் கட்சியும், ராகுலும் பிரியங்காவும் குரல் கொடுப்பார்கள் என்பது வெளிப்பட்டுவிட்டது’ என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் விமர்சித்தார்.

    நிதி மந்திரியின் இந்த கேள்விக்கு பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ‘போலீஸ் விசாரணை நடைபெற்று வருவதால், ஹோசியார்பூர் பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை நாங்கள் சந்திக்க வேண்டிய தேவை இல்லை. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், ஹத்ராஸ் சம்பவத்தில், போலீஸ் விசாரணை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை’ என்றார்.
    Next Story
    ×