search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங்
    X
    பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங்

    ராகுல் வெளிநாட்டு மனநிலை கொண்டவர் - ’பெண்குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை சொல்லி வளர்த்தால் பலாத்காரம் தடுக்கப்படும்’ என கூறிய பாஜக எம்எல்ஏ பேச்சு

    பெண் குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை சொல்லி வளர்த்தால் பலாத்காரம் தடுக்கப்படும் என கூறி சர்ச்சையை ஏற்படுத்திய பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி வெளிநாட்டு மனநிலையை கொண்டவர் என தெரிவித்துள்ளார்.
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் செப்டம்பர் 14-ம் தேதி புல் அறுக்க சென்ற 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்லால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். 

    பாலியல் கொடுமைக்கு உள்ளானதால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த இளம்பெண் செப்டம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையில், இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த உத்தரபிரதேச மாநிலம் பல்யா தொகுதி பாஜக எம்.எல்.ஏ. சுரேந்திர சிங், 

    “அரசாங்கம் தனது கைகளில் வாளை ஏந்தி இருந்தாலும் இதுபோன்ற (பாலியல் வன்கொடுமை) குற்றச்செயல்களை தடுக்க முடியாது. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு, கலாச்சாரத்தையும், சடங்குகளையும், நல்ல பண்புகளையும் சொல்லி கொடுத்து வளர்ப்பதன் மூலமாகவே பாலியல் வன்கொடுமையை தடுக்க முடியும்’ என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

    ராகுல்காந்தி

    பாஜக எம்.எல்.ஏ.வின் சர்ச்சை கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ’இது பாஜகவை வழிநடத்துகிற ஆர்.எஸ்.எஸ்., ஆணாதிக்க மனநிலை இது. ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். ஆனால், பெண்களுக்கு நல்ல பண்புகள் கற்பிக்க வேண்டுமா?' என தெரிவித்திருந்தார்.

    இதனால், ஹத்ராஸ் சம்பவத்தை முன்வைத்து காங்கிரஸ், பாஜக இடையே வார்த்தை மோதல் நிலவி வருகிறது. 

    இந்நிலையில், தனது கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்திருந்த ராகுல்காந்தியை சர்ச்சை பாஜக எம்.எல்,ஏ. சுரேந்திர சிங் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

    இது தொடர்பாக ராகுல்காந்தியை தாக்கி பாஜக எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் கூறியதாவது:-

    ராகுல் காந்தி இரட்டை பண்பு உடையவர் மட்டுமல்லாமல் வெளிநாட்டு மனநிலையை கொண்டவர். அவருக்கு இந்திய கலாச்சாரம் பற்று ஒன்றும் தெரியாது. அவர் தேசிப்பற்றாளர்களிடம் இருந்து பாடம் கற்றால் மட்டுமே தேசியவாதத்தின் உண்மையான விளக்கத்தை அறிவார். நாட்டின் முக்கியமான பிரச்சனைக்கள் அவருக்கு புரியாது. 

    ஹத்ராஸ் பயணத்தின்போது இருவரும் (ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி) சிரித்துக்கொண்டு செல்கின்றனர். ஹத்ராஸ் குடும்பத்தினரின் வீட்டில் அவர்கள் அழுகின்றனர். ஹத்ராஸ் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க வந்தபோது ராகுல், பிரியங்கா காந்தியின் இரட்டை குணம் தெரியவந்துள்ளது.

    என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×