என் மலர்

  நீங்கள் தேடியது "Surendra Singh"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமேதி பாராளுமன்ற தொகுதியில் தனது வெற்றிக்காக அரும்பாடுபட்டு, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சுரேந்திரா சிங்கின் பாடையை மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி இன்று சுமந்து சென்றார்.
  லக்னோ:

  உத்தரபிரதேசம் மாநிலத்தின் அமேதி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தோல்வியடைந்தார்.

  அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானி வேட்புமனு தாக்கல் செய்த நாளில் இருந்து அவருடன் இரவும் பகலுமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜக பிரமுகர்களில் முக்கியமானவர் பரவுலி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுரேந்திரா சிங். இவர்மீது ஸ்மிருது இரானி மிகவும் அன்பு செலுத்தி, சகோதரராக பாவித்து பழகி வந்தார்.

  இந்நிலையில், நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் சுரேந்திரா சிங்கை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்தார்.

  இந்த படுகொலை தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இதில் தொடர்புடைய சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

  இந்நிலையில், சுரேந்திரா சிங் மரணம் தொடர்பான செய்தியை அறிந்த மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார். இன்று பிற்பகல் நடந்த இறுதி யாத்திரையில் பங்கேற்ற அவர் கண்ணீர் மல்க சுரேந்திரா சிங்கின் பாடைக்கு தோள்கொடுத்து சுமந்து சென்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபல நடிகையும் நாட்டிய கலைஞருமான சப்னா சவுத்ரி காங்கிரசில் இணைந்ததாக வந்த செய்திக்கு பதில் அளித்த பாஜக எம்.எல்.ஏ. சோனியா காந்தி இத்தாலியில் நாட்டியக்காரியாக இருந்ததாக தெரிவித்துள்ளார். #SapnaChaudhary #dancerSoniaGandhi #SoniaGandhi #BJPMLA #SurendraSingh
  சண்டிகர்: 

  உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபையில்  பாஜக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சுரேந்திரா சிங். உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி மாயாவதி வயதையும் நரைமுடியையும் மறைக்க தலையில் ‘டை’ பூசிக்கொள்வதாகவும், முகத்தை பளபளப்பாக காட்டிக்கொள்ள அடிக்கடி அழகு நிலையங்களில் ‘ஃபேஷியல்’ செய்து கொள்வதாகவும் சமீபத்தில் இவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

  இந்நிலையில், பிக்பாஸ் இந்தி தொடர் மூலம் சமீபத்தில் பிரபலமடைந்த நடிகையும் ‘ஹர்யான்வி’ நாட்டியக் கலைஞருமான சப்னா சவுத்ரி என்பவர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. 

  உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் நடிகை ஹேமா மாலினிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் சப்னா சவுத்ரி நிறுத்தப்படலாம் எனவும் பேசப்பட்டது.

  இவ்விவகாரம் தொடர்பாக பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த பாஜக எம்.எல்.ஏ. சுரேந்திரா சிங், 'அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இழந்துவிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இப்போது நாட்டியக்காரிகள் மீது நம்பிக்கை வைக்க தொடங்கியுள்ளதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், இந்த நாட்டை நாட்டியக்காரிகள் வழிநடத்துவதை மக்கள் விரும்ப மாட்டார்கள்.

  ராகுல் காந்தியின் அம்மா சோனியாவும் இத்தாலியில் நாட்டியக்காரியாக இருந்தார். அவரை பார்த்த ராஜீவ் காந்தி சோனியாவை சொந்தமாக்கிக் கொண்டதுபோல், அப்பாவின் வழியில் ராகுல் காந்தியும் சப்னா சவுத்ரியை தனது சொந்தமாக்கி திருமணம் செய்துகொள்ள வேண்டும். 

  அப்போதுதான் மாமியாரும் மருமகளும் ஒரே தொழிலில் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள்’ என்று தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.  இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாக வெளியான செய்தியை சப்னா சவுத்ரி இன்று மறுத்துள்ளார். நான் எந்த கட்சியிலும் சேரவில்லை. யாரை ஆதரித்தும் பிரசாரம் செய்யப்போவதில்லை. பிரியங்கா காந்தியுடன் நான் இருப்பதுபோல் வெளியாகி இருக்கும் புகைப்படம் பல ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

  ஆனால், இந்த விளக்கத்தை உத்தரப்பிரதேசம் மாநில காங்கிரஸ் செயலாளர் நரேந்திரா ரத்தி மறுத்துள்ளார்.

  நடிகை சப்னா சவுத்ரியும் அவரது சகோதரியும் காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்து கட்சியில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்து, உறுப்பினர் படிவத்தில் கையொப்பமிட்டு, உறுப்பினர் சேர்க்கை சீட்டுக்கான கட்டணத்தையும் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்ட அவர் இதற்கு ஆதாரமாக சப்னா சவுத்ரி உறுப்பினர் படிவத்தில் கையொப்பமிடும் புகைப்படத்தை நரேந்திரா ரத்தி இன்று வெளியிட்டுள்ளார்.

  பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, சோனியா காந்தி, ராஜ்நாத் சிங், வருண் காந்தி, ஹேமா மாலினி என பல வி.ஐ.பி. வேட்பாளர்கள் போட்டியிடும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தற்போது சப்னா சவுத்ரி விவகாரம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. #SapnaChaudhary #dancerSoniaGandhi #SoniaGandhi #BJPMLA #SurendraSingh
  ×