search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு கூட்டம்
    X
    பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு கூட்டம்

    டெல்லியில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு கூட்டம் - மோடி, ஜேபி நட்டா, அமித் ஷா பங்கேற்பு

    பீகார் மாநிலத்தில் இம்மாத இறுதியில் தேர்தல் நடைபெற்ற உள்ள நிலையில் பாஜக மத்திய தேர்தல் குழு இன்று நடைபெற்றது. இதில் நரேந்திரமோடி, ஜேபி நட்டா, அமித்ஷா உள்பட பாஜக-வின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
    புதுடெல்லி:

    243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தின் சட்டமன்றத்தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. அக்டோபர் 28-ம் தேதி, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய மூன்று தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    இந்த தேர்தலில், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை தக்கவைத்து கொள்ள பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் கட்சியும் முனைப்பு காட்டி வருகின்றன.

    பீகார் தேர்தலை தொடர்ந்து தமிழகம், மேற்குவங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், இந்திய அரசியலில் தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தலைமையில் அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

    சட்டமன்ற தேர்தலுக்கான அறிக்கை தயாரிப்பு, தலைவர்களின் பிரசார யுக்தி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக நடந்த இந்த கூட்டத்தில் பாஜகவின் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
    Next Story
    ×