search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜ்நாத் சிங்
    X
    ராஜ்நாத் சிங்

    பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி - ராஜ்நாத் சிங் வாழ்த்து

    நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடிய அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றிக்கு பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    நீண்டதூரம் சென்று இலக்கைத் தாக்கும் வகையில் பிரம்மோஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை இன்று காலை ஒடிசா மாநிலம் பாலசூர் கடற்கரையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

    முழுக்க முழுக்க உள்நாட்டு மூலப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிக்கு பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இன்று சோதித்துப் பார்க்கப்பட்ட ஏவுகணை  400 கி.மீட்டர் தொலைவு வரை பாய்ந்து இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாகும். 

    ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து, டிஆர்டிஓ-வுக்கு பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ''பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிற்கு வாழ்த்துகள். உள்நாட்டு எரிபொருள் பயன்படுத்தப்பட்ட சூப்பர் சோனிக் கப்பல் ஏவுகணையின் மூலம் பாதுகாப்புத் துறைக்கான உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டுள்ளது''  என தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×